1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 டிசம்பர் 2020 (09:32 IST)

ஏதேதோ ட்ரை பண்ணும் சசிகலா; மசியாத சிறைத்துறை: விடுதலை கஷ்டம் தான்???

சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி வருகிற ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தான் சசிகலா விடுதலை ஆவார் என தெரிகிறது. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பாரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிக்கலா கட்டவேண்டிய அபராத தொகையான ரூ.10.10 கோடி நேற்று செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அபராத தொகையை செலுத்தி விட்டதால் சசிகலா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என பேசிக் கொள்ளப்பட்டது. 
  
ஆனால் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில், தண்டனை காலம் ஜனவரி 27 ஆம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் தெரியவந்தது. 
இந்நிலையில், சசிகலாவின் மனு, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுகுறித்து சட்ட ஆலோசனையை சிறைத்துறை கேட்டுள்ளது.  ஆனால், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு விடுமுறை சலுகை கிடைக்காது என்று சிறை நிர்வாகம் சூசகமாக தெரிவித்துள்ளது.
 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முன்பு 35 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த நாட்கள் அவரது தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் 2 முறை 17 நாட்கள் பரோலில் வீட்டுக்கு சென்றார். இந்த 17 நாட்களும் தண்டனை காலத்தில் சேர்க்கப்படும். 
 
அப்படி இப்படி என எப்படி கணக்கு போட்டாலும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி வருகிற ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தான் சசிகலா விடுதலை ஆவார். அதற்கு முன் விடுதலை ஆவதற்கு வாப்புகள் குறைவு என கூறப்பட்டுகிறது.