ரஜினி - கமலுக்கு தூது விட்ட சரத்: கூட்டணி பலம்பெறுமா?

Sugapriya Prakash| Last Modified சனி, 27 பிப்ரவரி 2021 (08:00 IST)
மக்கள் சேவை என்ற நிலைப்பாட்டில் உள்ள மேலும் சில முக்கிய கட்சிகளை கூட்டணிக்கு வர உள்ளதாக சரத்குமார் தகவல். 

 
தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரின் அகில இந்திய மக்கள் சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் சென்னை வடபழனியில் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்து, தங்கள் கட்சிகள் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்தனர்.
 
மேலும், மக்கள் சேவை என்ற நிலைப்பாட்டில் உள்ள மேலும் சில முக்கிய கட்சிகளை கூட்டணிக்கு வர உள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்க்ம், ரஜினியின் மக்கள் மன்றத்திற்கும் கூட்டணிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :