வைகோவை பொளந்துகட்டிய சந்திரகுமார்: அதிமுகவிடம் பணம் வாங்கியதை ஒத்துக்கொள்வாரா?


Caston| Last Modified புதன், 6 ஏப்ரல் 2016 (13:23 IST)
தேமுதிகவில் இருந்து நேற்று நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்திரகுமார் கடுமையாக சாடினார்.

 
 
திமுகவிடம் பணம் வாங்கிவிட்டு தான் தேமுதிகவை உடைக்கும் முயற்சியில் சந்திரகுமார் போன்றோர் இட்டுபட்டுள்ளதாக வைகோ நேற்று கருத்து தெரிவித்தார். வைகோவின் இந்த கருத்துக்கு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரகுமார் பதிலளித்தார்.
 
எங்கள் பிரச்னையில் வைகோ தலையிட வேண்டாம். இது எங்கள் கட்சியின் உட்கட்சி விவகாரம், அவர் கட்சியில் இருக்கும் பிரச்னைகளை வைகோ முதலில் கவனிக்கட்டும் என்றார் சந்திர குமார்.
 
மேலும், திமுகவில் இருந்து வைகோ பிரிந்து தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்கும் போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக் கொண்டா திமுகவை உடைத்தார்? என சந்திர குமார் கேள்வி எழுப்பினார். அவர் அதிமுகவிடம் பணம் வாங்கியதை ஒத்துக்கொண்டால் நான் திமுகவிடம் பணம் வாங்கியதை ஒத்துக்கொள்கிறேன் என்றார் சந்திரகுமார்.
 
திமுகவில் பிரச்னை என்றதும் அதிலிருந்து வைகோ வெளியேறலாம். இதை நாங்கள் செய்தால் அது பற்றி அவதூறாகப் பேசுவதா எனவும் சந்திரகுமார் கூறினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :