சானிடைசர் பயன்படுத்தியவர் …சிகரெட் பிடித்ததால் தீ பற்றி எரிந்து… விபரீதம்

sipcot
Sinoj| Last Updated: திங்கள், 12 ஏப்ரல் 2021 (18:35 IST)


கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் இப்பெருந்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு வழிகாட்டு வழிமுறைகளை வெளியிட்டதுடன், சானிடைசர் பயன்படுத்தவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் முகக்கவசம் பயன்படுத்தவும் கூறியுள்ளது.

இந்நிலையில், சென்னை அசோக் நகரில் வசிப்பவர் ரூபன் . இவர் கோடம்பாக்கத்தில் வேலை செய்து வருகிறார். இன்று தனது அலுவகத்தைவிட்டு வெளியே சென்ற அவர் திரும்ப அலுவலகத்திற்குள் நுழையும்போது, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்துள்ளார்.பின்னர் கழிவறைக்குச் சென்று சிகரெட் பிடிக்க லைட்டரை பற்றவைத்துள்ளார், அவரது கைகளில் தீப்பற்றி எரிந்ததும் அலறிதுடித்தார்.அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :