தமிழகத்தில் வெள்ள பாதிப்பு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி: தமிழிசை சவுந்தரராஜன்


K.N.Vadivel| Last Modified செவ்வாய், 24 நவம்பர் 2015 (01:24 IST)
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி என்று தெரிய வந்துள்ளது என  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
 
சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் கரையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
சென்னை கடும் தொடர் மழை காரணமாக பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் பார்வையிட்டார். இதில், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி மிகவும் சேதம் அடைந்துள்ளதாக தமிழக அரசு உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
 
இதில், தமிழகத்தில் வெள்ள பாதிப்பு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி என்று தெரிய வந்துள்ளது. முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி மத்திய அரசிடம், மாநில அரசு கோரி உள்ளது. தமிழக அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என்றார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :