சிறையிலிருந்து ரவுடி என்னை மிரட்டுகிறார் : ஆடியோ வெளியிட்ட நடிகை

சிறையிலிருந்து நடிகையை மிரட்டிய ரவுடி


Murugan| Last Updated: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (12:50 IST)
தொழிலதிபர் ஒருவருடன் நட்பாக பழகுவதை, தவறாக எடுத்துக்கொண்டு  ரவுடி ஒருவர் மிரட்டுவதாக புகார் கூறிய நடிகை, ஆடியோவும் வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
சுந்தர டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் ஏற்கனவே பல பரபரப்புகளை ஏற்படுத்தியவர். இவர் மீது சமீபத்தில் கூட, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த உமாதேவி என்பவர் போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தார்.
 
நடிகை ராதா தன்னுடைய கணவரை தன்னிடமிருந்து பிரிக்க முயல்வதாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், தனது கணவனை காணவில்லை என்றும், ராதாதான் ஏதோ செய்துள்ளர் என்றும், அந்த புகாரில் குறிப்பிட்டுருந்தார்.
 
இந்நிலையில், சிறையில் இருக்கும் குன்றத்தூர் வைரம் என்ற  ரவுடி, தன்னை செல்போனில் மிரட்டியதாக நடிகை ராதா ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். முனிவேல் என்ற தொழிலதிபர் ஒருவருடன் நட்பாக பழகுவதை தவறாக எடுத்துக் கொண்டு காமாட்சி என்பவர் அந்த ரவுடி மூலம் தன்னை மிரட்டியுள்ளார் என்றும், சிறையில் இருக்கும் ஒருவர் இப்படி செல்போன் மூலம் மிரட்டல் விடுவது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நடிகை ராதா தெரிவித்துள்ளார்.

அந்த ஆடியோ தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது..


இதில் மேலும் படிக்கவும் :