குமரி பேரணியில் அமித்ஷா: புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகர்!

குமரி பேரணியில் அமித்ஷா: புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகர்!
siva| Last Updated: ஞாயிறு, 7 மார்ச் 2021 (18:00 IST)
குமரி பேரணியில் அமித்ஷா: புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகர்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இன்று தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் காரணமாக வந்து இருந்தார் என்பதும் அவர் நாகர்கோவிலில் நடைபெற்றுவரும் பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்ததே

இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் அவர் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தீவிரமாக ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்

அமித்ஷாவை பார்ப்பதற்கும் அவரது பேச்சை கேட்பதற்கும் அங்கு ஏராளமானோர் திரண்டுள்ளனர் ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டம் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள மாவட்டம் என்பதால் அமித்ஷாவை பார்க்க பலர் கூடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குமரியில் நடந்த பேரணி குறித்த புகைப்படங்களை தமிழ் நடிகர் ஆர்கே சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் ஏற்கனவே இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :