தேர்தல் ஆணையம் சரியில்லை: அதனால் ஆர்.கே. நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை- ஈவிகேஎஸ் இளங்கோவன்


K.N.Vadviel| Last Updated: திங்கள், 8 ஜூன் 2015 (12:18 IST)
தமிழக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தினால், ஆர்.கே. நகர் தொகுதியில், காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில், நடைபெற உள்ள இடைத் தேர்தலில், சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவதால், அங்கு அதிக அளவில் அத்துமீறல் நடைபெறுகிறது. அதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை.
 
மேலும், தேர்தல் ஆணையத்தின் உதவியோடு பணப்பட்டுவாடா நடைபெறும் என நாங்கள் குற்றம் சாட்டியிருந்தோம். ஆனால், எங்கள் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் முறையாக பதிலளிக்கவில்லை. மேலும், ஆளும் கட்சிக்கு தேர்தல் ஆணையம்  துணை போகின்றது என குற்றம் சாட்டினார். 
 
ஏற்கனவே, இந்த தொகுதியில் திமுக, பாமக, தாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.


இதில் மேலும் படிக்கவும் :