ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

K.N.Vadivel| Last Updated: திங்கள், 8 ஜூன் 2015 (15:55 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரமேஷ் வழக்கு தொடுத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்
ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் எந்தவித காரணமும் கூறாமல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக, அத்தொகுதியில் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவ்வாறு இடைத் தேர்தலை நடத்துவதன் மூலம் மக்கள் வரிப்பணம்தான் தேவையின்றி செலவாகின்றது.
எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான செலவை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வெற்றிவேலிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளார்.

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதில் மேலும் படிக்கவும் :