சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2017 (16:32 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு இரட்டை சின்னத்தை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சசிகலா தரப்பினருக்கும் இரட்டை சின்னத்தை வழங்க கூடாது என கோரிக்கை மனு அளித்தனர்.

 

 
இதுகுறித்து அதிமுக பொது செயலாளர் சசிகலா வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த மனு நகலை இணைத்து பதலளிக்க கோரியுள்ளது.
 
சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டினர். அப்போது சசிகலா பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு சசிகலா தனது வழக்கறிஞர் மூலம் பதில் மனு அனுப்பினார். அந்த பதில் மனு நகலை இணைத்து ஓபிஎஸ் அணியினருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்து அதற்கு அவர்கள் தரப்பு குறித்து கருத்து அளிக்க கோரியது.
 
இதையடுத்து ஓபிஎஸ் அணியினர் மீண்டும் சசிகலா அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது தங்களுக்கு தான் ஒதுக்க வேண்டும் இந்திய தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தற்போது இதுகுறித்து பதில் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையம், சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :