தமிழக அரசுக்கு உதவி செய்ய மத்திய அரசு தயார்: பொன்.ராதாகிருஷ்ணன்


K.N.Vadivel| Last Modified புதன், 18 நவம்பர் 2015 (22:27 IST)
பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யவும், தமிழக அரசுக்கும் உதவி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
 
சுதந்திர போராட்ட வீரர், வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை  சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, தமிழக தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளேன். பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய தயராக உள்ளது.
 
பீகார் மாநில அரசியல் என்பது வேறு. தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம் என்பது வேறு. எனவே, பீகார் தேர்தலுன் தமிழகத்தை ஒப்பிட்ட முடியாது. ஆனாலும், அந்த  மாநிலத்தில் 1.5 கோடி வாக்குகளை பாஜக பெற்று முதன்மை கட்சியாகவே உள்ளது.
 
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைய ஆர்வமாக உள்ளன. அந்த கட்சிகள் குறித்து தற்போது வெளிப்படையாக ஏதும் கூற முடியாது.
 
வ.உ.சி. கண்ட கனவுகளை மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு மட்டுமே நிறைவேற்றி வருகிறது. உலகத்திலே இந்தியாவை முதன்மையான நாடாக்க பிரமதர் நரேந்திர மோடி உறுதி எடுத்துள்ளார் என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :