அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; 16 மாடுகளை பிடித்த வீரருக்கு கார் பரிசு

Arun Prasath| Last Modified வெள்ளி, 17 ஜனவரி 2020 (19:53 IST)
அலங்காநல்லூரில் நடைபெற்று முடிந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 16 மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித்திற்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில் இன்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதில் 600 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற 739 காளைகள் பங்கேற்றது. இந்நிலையில் இப்போட்டியில் 16 மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :