என்னை பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும்: மாதம்பட்டி ரங்கராஜ் மனுதாக்கல்..!
மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளை ஜாய் கிரிசில்டா தெரிவித்ததாகவும், அவரை பற்றி பேசுவதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் ரங்கராஜுடன் வாழ்ந்ததாகவும், அதனால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா என்பவர் சமூக வலைத்தளங்களில் பேட்டி அளித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், ஜாய் கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னைப்பற்றி அவதூறு பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்றும், அப்போது நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Editd by Mahendran