விவேக்கின் வயது அளவில் மரக்கன்றுகள் நட்ட ரம்யா பாண்டியன்!

Ramya pandiyan
Prasanth Karthick| Last Modified வியாழன், 22 ஏப்ரல் 2021 (14:38 IST)
மறைந்த நடிகர் விவேக்கின் கனவை நிறைவேற்றும் விதமாக பலர் மரக்கன்றுகள் நட்டு வரும் நிலையில் நடிகை ரம்யா பாண்டியனும், காவலர்களோடு மரக்கன்றுகள் நட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும், சுற்று சூழல் ஆர்வலருமான விவேக் கடந்த சில நாட்கள் முன்னதாக உயிரிழந்தார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மீது பற்று கொண்ட விவேக் அவரது வலியுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை குறிக்கோளாக கொண்டு இயங்கி வந்தவர். அவர் தற்போது இறந்துள்ள நிலையில் அவரது குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் பலரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் திருவள்ளூர் ஆயுதப்படை மைதானத்தில் விவேக் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் அவரது 59 வயதை நினைவுறுத்தி 59 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகை ரம்யா பாண்டியனும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இதில் மேலும் படிக்கவும் :