1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (11:04 IST)

ராம்குமார் வழக்கறிஞருக்கு மிரட்டல்: வழக்கில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க மனு தாக்கல் செய்தார் வழக்கறிஞர் மகேந்திரன்.


 
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு பதிலாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதாடினார். பின்னர் இந்த வழக்கு 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென இந்த இரண்டு வழக்கறிஞர்களும் தாங்கள் இனிமேல் இந்த வழக்கில் ஆஜராக போவதில்லை என அறிவித்துள்ளனர்.
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியபோது, நான் இந்த மனுவை நேரடியாக தாக்கல் செய்யவில்லை. இந்த மனுவை தாக்கல் செய்தவர் மகேந்திரன், அவருக்கு பதிலாக நான் ஆஜராகி வாதிடினேன்.
 
தற்போது மகேந்திரனுக்கு பயங்கர அச்சுறுத்தல் வருவதால் அவர் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். எனவே நானும் இனிமேல் இந்த வழக்கில் ஆஜராக போவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என அவர் கூறினார்.
 
மேலும், இந்த வழக்கில் பல சர்ச்சை கருத்துக்கள் வருகிறது. எங்களுக்கு ஏற்கனவே வேலைப்பளு அதிகமாக உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகி எங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ராம்குமாரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தால், ஒருவேளை இதில் ஆஜராக வாய்ப்புள்ளது எனவும் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.