தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 ஆவது நாளாக வேலை நிறுத்தம்

fishermen
Suresh| Last Updated: புதன், 9 செப்டம்பர் 2015 (12:10 IST)
இலங்கை சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 ஆவது நாளாக வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும்.

இலங்கை கடற்கரையில் உள்ள சேதமடைந்த தமிழக விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இம்மாதம் 5 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் 2500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் ராமேஸ்வரத்தில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :