தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கைக் கடற்படை சிறை பிடித்தது

K.N.Vadivel| Last Modified வியாழன், 4 ஜூன் 2015 (08:45 IST)
ராமேஸ்வரத்தில் இருந்து, கடலுக்குச் சென்ற 5 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து, புதன்கிழமை அன்று மீனவர்கள் பலர் குழுக்களாக, கடலுக்கு மீன் படிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு தீடீரென வந்த இலங்கை கடற்படையினர், ஒரு படகிலிருந்த 5 மீனவர்களை மட்டும் சிறைப் பிடித்தனர். பின்பு, அவர்களை தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர்.
தடைக் காலம் முடிந்து கடலுக்குச் சென்ற முதல்நாளிலேயே 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

தற்போது, மேலும் 5 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :