ஒரே ’ரூட்’; 1000 டிக்கெட் - கல்லூரி பெண்ணின் புதிய சாதனை


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 14 ஜூன் 2016 (11:11 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரே பேருந்து வழித்தடத்தில் பயணம் செய்து ஆயிரம் பயணச் சீட்டுகளை சேகரித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.
 
 
ராமநாதபுரம் மாவட்டம் அருகே பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தஹ்மிதா பானு. இவர், கீழக்கரையில் தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துள்ளார்.
 
இவர், தனது கல்லூரிக்கு செல்வதற்காக பனைக்குளத்திலிருந்து அழகன்குளம் செல்லும் நகரப் பேருந்தில் பயணம் செய்து மொத்தம் ஆயிரம் சீட்டுகளை சேகரித்து வைத்துள்ளார். இதற்காக, இவருக்கு இந்திய சாதனைப் புத்தகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
 
இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ராமநாதபுரம் மாவட்ட இஸ்லாமியப் பெண்ணை, ஆட்சியர் எஸ். நடராஜன் திங்கட்கிழமை வாழ்த்தினார்.
 
தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், ’பேருந்து நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த சாதனையை செய்துள்ளேன்’ என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :