ஜெயலலிதாவிற்கு ரஜினி வாழ்த்து - அரசியலில் இதெல்லாம் சகஜம்: பாஜக பொதுச் செயலாளர்

ஜெயலலிதாவிற்கு ரஜினி வாழ்த்து - அரசியலில் இதெல்லாம் சகஜம்: பாஜக பொதுச் செயலாளர்
லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 20 அக்டோபர் 2014 (18:43 IST)
ஜெயலலிதாவிற்கு, ரஜினிகாந்த் வாழ்த்து கூறியது சகஜமானது தான் என்று பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், "ரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது சகஜமானதுதான். இதில் எந்த அரசியல் முக்கியத்துவம் இல்லை, தவறும் இல்லை. ரஜினிகாந்த் சிறந்த மனிதர். மக்கள் செல்வாக்கு படைத்தவர். அவரை போன்ற பிரபலங்கள், நல்லவர்கள் பாரதிய ஜனதாவுக்கு வருவதை வரவேற்போம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "மத்திய மந்திரி மேனகாகாந்தி தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளார். அது பாரதீய ஜனதாவின் கருத்து அல்ல. மத்திய அரசை பொறுத்தவரை தூய்மையான நல்ல நிர்வாகத்தை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது" என்றும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :