ரஜினி என்ன சொன்னாலும் அதை செய்வோம்! – நாளைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

rajni
Prasanth Karthick| Last Updated: திங்கள், 30 நவம்பர் 2020 (12:39 IST)
நடிகர் ரஜினி தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த நிலையில் நாளைக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மன்ற நிர்வாகிகளோடு இன்று கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் கட்சி தொடங்குவது குறித்து நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட ரஜினிகாந்த், சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என கூறியுள்ளதோடு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருப்பதன அவசியத்தையும் எடுத்து கூறி விரைவில் கட்சி குறித்து அறிவிப்பதாகவும், அதுவரை பொறுமை காக்குமாறும் கூறியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தினர் “ரஜினி அரசியல் கட்சி குறித்து என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு நடப்போம். ரஜினி தனது முடிவு குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலையோ அல்லது நாளை காலையோ வெளியிடுவார்” என கூறியுள்ளனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :