வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 13 ஜனவரி 2016 (12:02 IST)

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் : இயக்குனர் சங்கம் கோரிக்கை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஏழு பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


 

 
பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், செல்வமணி, பேரரசு, அமீர் மற்றும் சில இயக்குனர்கள் நேற்று சிறையில் சந்தித்து பேசினார்கள்.

அதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது “இவர்களை அனைவரையும் 25 வருடங்களாக சிறையில் அடைத்து வைத்திருப்பது கொடுமையாக இருக்கிறது. அவர்களை, மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உடபட்ட குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் மட்டும் பார்க்காமல், தமிழக அரசின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
 
விரைவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே அண்ணா நூற்றாண்டு தொடக்க விழாவின் போது, ஏராளமான ஆயுள் தண்டனை கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அதேபோல், எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு தொடக்க விழாவின் போது, முருகன், நளினி, பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல் அமைச்சரிடம் விரைவில் அனு அளிக்க உள்ளோம்” என்று கூறினார்கள்.