செய்தியாளர்களை ரஜினி சந்திக்கின்றார் என்பது வதந்தியா?

rajini
செய்தியாளர்களை ரஜினி சந்திக்கின்றார் என்பது வதந்தியா?
siva| Last Updated: புதன், 24 பிப்ரவரி 2021 (21:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார்
இந்த நிலையில் நாளை மறுநாள் தனியார் ஸ்டார் ஓட்டலில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார் என்றும் அப்போது அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் சற்று முன்னர் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது ரஜினிகாந்த் அவர்கள் ஊடகங்களை சந்திக்கிறார் என்று எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் ரஜினி தரப்பிலிருந்து செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் இருந்தால் மட்டுமே அது அதிகாரபூர்வமானது என்றும் தெரிவித்துள்ளனர்

முன்னணி ஊடகங்கள் கூட இந்த செய்தியை உறுதி செய்யாமல் செய்தியாக வெளியிட்டது வருத்தத்துக்குரியது என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :