வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Geetha Priya
Last Modified: ஞாயிறு, 4 மே 2014 (13:35 IST)

கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் மிதமான மழை

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கத்தரி வெயில் இன்று தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்துள்ளது.
 
கத்தரி வெயில் இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட சில இடங்களில் பரவலாக  மழை பெய்துள்ளது.  
 
இம்மாதம் 28 ஆம்  தேதி வரை நீடிக்கும் இந்த கத்தரி வெயிலின்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். கத்திரி வெயிலின்போது தட்பவெட்பம் 113 முதல் 115 டிகிரி பாரன்ஹீட் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.