வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2015 (11:37 IST)

தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் : ஆந்திரா நோக்கி செல்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் மையம் கொண்டிருந்து காற்றழுத்த தாழ்வுபகுதி, ஆந்திராவை நோக்கி செல்வதால், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் எனவும் வடமாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் எனவும்  வானிலை மையம் அறிவித்துள்ளது.


 
 
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறிய போது:
 
தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலைகொண்டிருந்த, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் நகர்ந்து தென் கடலோர ஆந்திரா பகுதிக்கு செல்கிறது.எனவே தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்று) வடமாவட்டங்களில் அநேக இடங்களிலும் மற்ற மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். ஆனால் தமிழ்நாட்டில் படிப்படியாக மழையின் அளவு குறையும். 
 
தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரா நோக்கிச் செல்ல உள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும். இந்த காலத்தில் தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய சராசரி மழை 44 செ.மீ. ஆனால் இதுவரை 38.3 செ.மீ.மழை பெய்துள்ளது. இன்னும் பெய்யவேண்டியது 6 செ.மீ. மழை தான்.
 
சென்னை மாவட்டத்தில் இந்த பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய சாராசரி மழை 85 செ.மீ. ஆனால் 91 செ.மீ.மழை பெய்துள்ளது” என்று ரமணன் தெரிவித்தார்.