தமிழகத்தில் கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

rain
Suresh| Last Modified வெள்ளி, 24 அக்டோபர் 2014 (16:01 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவுக்கும் லட்சத்தீவுக்கும் இடையே தென்மேற்கு, மத்திய அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இந்தப் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் நாளில் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்தால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மன்னர் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :