10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்: பால் கனகராஜ் வேண்டுகோள்

 Exam
Suresh| Last Updated: ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (08:41 IST)
பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில கட்சித் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 
இது குறித்து ஆர்.சி.பால் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
 
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 1 மாத விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
 
பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களால் முழுமையாக தேர்வை எதிர்கொள்ள முடியுமா என்ற பயம் உள்ளது.
 
விடுமுறையால் ஒரு மாத படிப்பு வீணானதை கணக்கில் கொண்டு ஆசிரியர்கள் முழுமையாக பாடம் நடத்த கால அவகாசம் தேவை என்பதால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு பிளஸ் 2 தேர்வை ஏப்ரல் முதல் வாரத்திலும், 10 ஆம் வகுப்பு தேர்வை ஏப்ரல் 15 தேதிக்கு பிறகும் வைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பால் கனகராஜ் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :