பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - ஸ்கேன் செண்டர்களில் அதிரடி சோதனை


Murugan| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (12:22 IST)
கரூரில் உள்ள தனியார் ஸ்கேன் மையங்களை சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலபணிகள் இயக்குநர் அலுவலக துணை கண்காணிப்பாளர் நரசிம்மவர்மன் தலைமையில், அலுவலக கண்காணிப்பாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

 

 
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கரூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராமராஜன், கரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 882 பெண் குழந்தைகள் தான் இருக்கிறது. எதிர்காலத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஸ்கேன் மையங்களில் பெண் குழந்தைகள் குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுவதா என்பது குறித்து ஆய்வு செய்தோம் என்று கூறினார். 
 
மேலும், நகரின் பல்வேறு ஸ்கேன் சென்டர்களுக்கு இது போன்று திடீர் ஆய்வு  மேற்கொள்ள இருப்பதாகவும், இது போன்று ஆய்வுகளுக்குப் பிறகு பெண் குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கரூரில் இது போன்று இன்னும் 3 ஸ்கேன் மையங்களில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் அப்படி செயல்பட்ட, மது ஸ்கேன் செண்டரை சீல் வைத்து மூடினர். ஏனென்றால் பிறக்கும் கரு ஆணா? பெண்ணா என்று கூறியது அம்பலப்பட்டதாக தெரிகின்றது.
 
இதே போல கடந்த நவம்பர் 22 ம் தேதியும் நாமக்கல்லில்  ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறியதாக 3 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல்! வைத்துள்ளனர்.
 
நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அறிந்த மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், இங்குள்ள ஸ்கேன் சென்டர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் சில ஸ்கேன் சென்டர்களில் பெண்ணின் கருவில் உள்ளது குழந்தை ஆணா? பெண்ணா ? என கண்டறிந்து கூறியது தெரியவந்தது.
 
இதனையடுத்து மாநில சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி கமலக்கண்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர், பல்வேறு ஸ்கேன் சென்டர்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் 3 முக்கிய ஸ்கேன் சென்டர்களில் கருவில் உள்ள சிசு குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு கூறி வந்தது ஆதாரத்துடன் தெரியவந்தது.
 
இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஸ்கேன் சென்டர்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். ((இந்த சோதனை, மாவட்டம் முழுவதும் தொடரும் என்றும், தவறு செய்யும் ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
 
இதே போல கடந்த ஆகஸ்ட் மாதம் திருவண்ணாமலை அவுல்கார தெருவில் அனுமதியின்றி கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வட்டாட்சியர், மருத்துவ அதிகாரிகள், காவல்துறையினர் கூட்டாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 


 
 
அப்போது அந்த மையத்தின் கதவை திறக்க உரிமையாளர் மறுத்ததால் கதவை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கருவில் இருக்கும் குழந்தையை இனம் கண்டறியும் ஸ்கேன் கருவிகள் இருப்பது தெரிய வந்தது. மேலும், பல லட்சம் ரூபாய்களுக்கான ஆவணங்கள் இருப்பதும்  கண்டறியப்பட்டது. 
 
அங்கிருந்த 5 கர்ப்பிணி பெண்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனையடுத்து அந்த மையத்தின் உரிமையாளர் திலகா என்கிற ஆனந்தி தமிழ்செல்வனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 
இந்த நிகழ்வுகள் தற்போது தான் வெளிச்சத்திற்கு வருகின்றது. இத்தனை நாள் எங்கே சென்றார்கள்? என்றும் பெண் குழந்தைகளை எத்தனை அழித்திருப்பார்கள் என்றும் விஸ்வரூபமெடுப்பதோடு, தமிழகத்தில் மற்ற மாவட்டங்களையும் இதே போல ஆய்வு செய்வதோடு, அந்த ஸ்கேன் மைய உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென்று மாதர்சங்கங்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். எந்த ஒரு செயலுக்கும் அரசும் கீழ் இருக்கும் என்பதற்கு இத்தனை நாள் நடைபெற்ற இந்த ஆணா ? பெண்ணா ? என்று அறிந்து அந்த பெண் குழந்தைகளை பல நூறோ ? பல ஆயிரமோ ? பல லட்சமோ ? பெண் குழந்தைகளை சிசுவிலே அழித்திருக்கின்றார்களே ? 
 
அந்த சிசுவின் மரணத்திற்கு அரசு என்ன பதில் சொல்லும், மேலும் இதே பெண் ஆட்சியான அ.தி.மு.க ஆட்சி தான் கடந்த முறையும் 5 ஆண்டுகள் ஆண்டது., அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் பொறுப்பு வகிக்கும் இதே துறையில் அரங்கேறுவது ஏன்? என்பதோடு, கரூரில் மேலும் ஒரு விஷயம் கசியத்தொடங்கியுள்ளது? என்னவென்றால் எலும்பு மூட்டு மாற்று சிகிச்சைக்கென்று தனியாக உரிமம் பெற்ற மருத்துவமனைகளில் மூளைக்கு ஆப்ரேஷன் நடக்கும் அவல நிலை? அதாவது எலும்பு மருத்துவர்கள் மூளைக்கு ஆப்ரேஷன் செய்யும் அவல நிலையும் தொடர்கின்றது? அந்த மருத்துவமனைகளை நிர்வகிப்பதும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர்கள் என்பது மேலும் அதிர்ச்சிக்குள்ளான விஷயம் ? தமிழக அரசின் மொளனம் சற்றென, பெண் குழந்தைகளை காப்பதில் குறிப்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் கலைக்கப்பட்டால் மட்டுமே பல உயிர் மிஞ்சும் என்பது சமூக நல ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளார்களின் கருத்தாகும்.
 
கரூர் செய்தியாள்ர்- சி.ஆனந்தகுமார் 


இதில் மேலும் படிக்கவும் :