தெருவோரக்கடையில் நுங்கு சாப்பிட்ட ராகுல்காந்தி! – வைரலாகும் வீடியோ!

Rahul Gandhi
Prasanth Karthick| Last Modified திங்கள், 1 மார்ச் 2021 (13:40 IST)
தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள ராகுல்காந்தி தெருவோரக் கடையில் நுங்கி சாப்பிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய தலைவர்கள் பலர் தமிழகம் வருகை தந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் முதலாக அடிக்கடி தேர்தல் பிரச்சாரம் நிமித்தம் தமிழகம் வருகை தரும் ராகுல்காந்தி அவ்வபோது எளிய மக்களுடன் உரையாடுவது, உணவருந்துவது என ட்ரெண்டாகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கன்னியாக்குமரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி செல்லும் வழியில் காரை நிறுத்தி அங்கு தெரு ஓரமாக இருந்து நுங்கு கடையில் நுங்கு வாங்கி சாப்பிட்டார். அதன் சுவை நன்றாக இருப்பதாக கூறிய அவர் நுங்கு வெட்டுவது குறித்தும் கேட்டறிந்தார்.இதில் மேலும் படிக்கவும் :