கல்லூரி மாணவியோடு தண்டால் போட்டி! – வைரலாகும் ராகுல்காந்தி வீடியோ!

Rahul Gandhi
Prasanth Karthick| Last Modified திங்கள், 1 மார்ச் 2021 (15:09 IST)
கன்னியாக்குமரியில் தேர்தல் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி அங்குள்ள கல்லூரி மாணவியோடு தண்டால் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய தலைவர்கள் பலர் தமிழகம் வருகை தந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் முதலாக அடிக்கடி தேர்தல் பிரச்சாரம் நிமித்தம் தமிழகம் வருகை தரும் ராகுல்காந்தி அவ்வபோது எளிய மக்களுடன் உரையாடுவது, உணவருந்துவது என ட்ரெண்டாகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கன்னியாக்குமரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி செல்லும் வழியில் காரை நிறுத்தி அங்கு தெரு ஓரமாக இருந்து நுங்கு கடையில் நுங்கு வாங்கி சாப்பிட்டார்.பின்னர் முளகுமூடு பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல்காந்தி டான்ஸ் ஆடியும், விளையாட்டு வீராங்கனை மாணவி ஒருவருடன் தண்டால் எடுத்தும் இருந்தார், இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :