மைக்செட்காரர்களுக்கு உள்ள முக்கியத்துவம்தான் விஜயகாந்துக்கும்: ராதாரவி


Bala| Last Modified புதன், 9 மார்ச் 2016 (13:21 IST)
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் கூட்டணி குழப்பம் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினரை விமர்சனம் செய்யும் பணியை துவக்கிவிட்டனர். அதிமுகவைச் சேர்ந்த ராதரவி பழனிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

 
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றிவிட்டது. அதுமட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெரும் வகையில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என ப திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். வரும் சட்டபேரவை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும். விஜயகாந்தை பொருத்தவரை தேர்தல் நேரத்தில் மேடை போடுபவர்கள், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் தான் இருக்கிறது என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :