மதுபானம் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது! – போலீஸார் எச்சரிக்கை!

Liquor
Prasanth Karthick| Last Modified புதன், 3 மார்ச் 2021 (14:31 IST)
தமிழக, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மதுபானம் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் என புதுச்சேரி போலீஸ் எச்சரித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதுபானங்களை கடத்துவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்க புதுச்சேரி போலீஸார் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.

அதன்படி, புதுச்சேரியில் மதுபானக்கடைகளில் ஒரு நபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி மற்றும் 4 லிட்டர் சாராயம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக மதுபானங்கள் கடத்தினால் குண்டர் சட்டத்தின் அடிப்படையில் கைது மற்றும் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :