வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (04:19 IST)

மக்கள்நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன்? வைகோ தகவல்

மக்கள்நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன்? வைகோ தகவல்

மக்கள்நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைவரா என்று நான் கருத்து சொல்ல முடியாது என வைகோ தெரிவித்துள்ளார்.
 

 
அதிமுக கூட்டணி கட்சிகளான தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அதிமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இந்த லிட்டில் தமாகாவும் இணைந்தது.
 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கலிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:-
 
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரை நம்ப வைத்து ஜெயலலிதா ஏமாற்றி விட்டார்.
 
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கு ஜி.கே.வாசனுக்கு ஏற்கனவே அழைப்பு அனுப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணியில் ஜி.கே.வாசனை சேர்ப்பது பற்றி நான் ஏதும் கூற முடியாது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு அதுபற்றி தெரிய வரும் என்றார்.