ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க முண்டியத்த கூட்டம்!

Sugapriya Prakash| Last Modified சனி, 15 மே 2021 (12:53 IST)
நேரு உள் விளையாட்டு அரங்கில் வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க கூட்டம் அலைமோதியது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் அதை வாங்க மக்கள் பெருமளவில் வருவதால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைத்து விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் நேரு உள் விளையாட்டு அரங்குக்கு மாற்றப்பட்டது.
 
காலை 9 மணி முதல் அங்கு மருந்து விற்பனை நடக்கும் என சொல்லப்பட்டுள்ள நிலையில் தினமும் 300 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்று அங்கு கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு மருந்து வாங்க சென்றனர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :