செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 24 ஏப்ரல் 2016 (19:33 IST)

புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு: பாமக

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, புதுச்சேரியில் 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.


 
 
முதலியார்பேட்டையில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் இன்று பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரிக்கான தேர்தல் அறிக்கையும் இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
 
இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என கூறியுள்ள பாமக, புதுச்சேரியில் ஆட்சியமைத்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
புதுச்சேரி என்றாலே மது, குறைவான விலையில் மது வாங்கலாம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. மது அருந்துவதற்காகவே புதுச்சேரிக்கு செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காணும் இடமெல்லாம் மதுக்கடைகள் நிரம்பியுள்ள புதுச்சேரியில் பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.
 
பாமகவின் இந்த அதிரடி அறிவிப்பு புதுச்சேரி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை தேர்தல் முடிவுகளில் பார்க்கலாம்.