வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 11 ஜூன் 2015 (12:19 IST)

கல்லூரிகளில் பேராசிரியர் பணி: தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடைபெறும் போதுதான் திறமை மிக்க பேராசிரியர்களை நியமிக்க முடியும் என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து தாமக தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனம் பேன்றவைகள் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறுகிறது.
 
ஆனால், பல்கலைக் கழகங்கள், கலை  அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நேர்காணல் மூலம் மட்டுமே பேராசிரியர்கள் பணி நியமனம் நடைபெறுகிறது.
 
இது போன்று நேர்காணல் நடைபெறும் போது தன்னிச்சையாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் அதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகிறது.
 
மேலும், கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடைபெறும் போதுதான் திறமை மிக்க பேராசிரியர்களை நியமிக்க வாய்ப்பை கிடைக்கும்.
 
ஆகவே, சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆகியவற்றில் பேராசிரியர் நியமனம் நடைபெறும் போது கல்வித் தகுதியை கருத்தில் கொண்டு பணி வழங்க வேண்டும்.
 
எனவே, 2015-2016ஆம் கல்வி ஆண்டு வரை உள்ள பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை, திறமையின் அடிப்படையில், வெளிப்படையான முறையிலும்,  நம்பகத்தன்மை உடைய முறையிலும் பணிநியமனம் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.