1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Producer Archana Kalpathi Appointed As Member Of HR and CE Temple Trustee Selection Committee

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு முக்கிய பதவி.. முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு...!

Archana Kalpathi
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பரம்பரை வழி அல்லாத தகுதியான அறங்காவலர்களை தேர்வு செய்வதற்காக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய மாநில குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 
ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேற்பட்ட திருக்கோயில்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர் பட்டியலை அரசுக்கு அளிப்பதற்காக இந்த மாநிலக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட இந்த குழுவின் அமைப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் இந்த மாநில குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (ஓய்வு) டாக்டர் கே.இராமநாதன் துணை தலைவராகவும், திரைப்பட தயாரிப்பாளர் திருமதி அர்ச்சனா கல்பாத்தி அகோரம், திரு. பராசம்பத் (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்), திருமதி மா.சுமதி (எ) சமத்ரீ மற்றும் டாக்டர் த.வேல்முருகன் ஆகியோர் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
இவற்றுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவி வழி உறுப்பினர் மற்றும் செயலராக செயல்படுவார். இந்த முக்கிய குழுவின் மூலம் கோயில்களின் நிர்வாக பணிகளை மேம்படுத்தும் வகையில் அறங்காவலர்களை தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சிப்காட் திறந்திங்களே கே.என். நேரு அங்கிள், ஆனால் வசதி செஞ்சு கொடுத்தீங்களா? அமைச்சர் கீர்த்தனா அதிரடி கேள்வி..