நாடு முழுவதும் வாக்குத்திருட்டு நடைபெறுகிறது.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு..!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பிஹாரில் மட்டுமின்றி, தமிழகம் உட்பட நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த முறைகேடுகளை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நியாயமாக நடத்தப்படுவது மிகவும் அவசியம் என்று அவர் கூறினார். பிரேமலதாவின் இந்த கருத்துகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஜனவரி 9ஆம் தேதி மதுரையில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில், தேர்தல் கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்த தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். அதுவரை, ஊகங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
Edited by Siva