சொன்னது 110 போட்டது 111 : போட்டுத் தாக்கிய பிரேமலதா

Murugan| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2015 (14:21 IST)
ஜெயலலிதா 110 விதியின் கீழ் பல திட்டங்களை
அறிவித்தார். ஆனால் மக்களுக்கு 111 போட்டு விட்டார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள மண்ணிப்பள்ளம் கிராமத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக சார்பில் நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா அதிமுக ஆட்சியை காட்டமாக விமர்சனம் செய்தார்.

அவர் பேசிய போது “தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொன்ன சொல்லை காப்பாற்றுவார். ஆனால் ஜெயலலிதா அப்படியில்லை. அவர் சொன்ன எதையும் அவர் செய்ததில்லை.

டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளம், ஆறுகளை சரியாக தூர்வாரவில்லை. இதனால் முறையாக தண்ணீர் பாயவில்லை. 110 விதியின் கீழ் சொன்ன அனைத்தையும நிறைவேற்றாமல் மக்களுக்கு ஜெயலலிதா 111 போட்டு விட்டார்.

மதுவை ஒழிக்கும் துணிவு ஜெயலலிதாவுக்கு இல்லை. தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நலிந்து போய் உள்ளது. அங்கே வேலை செய்பவர்களுக்கு ஒழுங்காக கூலி கூட குடுப்பதில்லை. இந்த ஆலையால் பாதிக்கப்பட்டு விவசாயி மாப்படுகை முருகையன் தற்கொலை செய்து கொண்டார்.இதற்கு ஜெயலலிதா அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை
“துளசி வாசம் மாறினாலும் மாறலாம் மக்களே. ஆனால் இந்த தவசி தேர்தல் கூட்டணி விசயத்தில் வார்தைதை மாறமாட்டார்” என்றார் பிரேமலதா.


தவசி எனும் திரைப்படத்தில்தான் விஜயகாந்த் இந்த பஞ்ச் டயலாக் பேசுவார். அதை சரியான நேரத்தில் மேடையில் பேசி, தேமுதிக தொண்டர்களிடையே கைத்தட்டலை வாங்கினார் பிரேமலதா.


இதில் மேலும் படிக்கவும் :