1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (12:36 IST)

காவல் துறைக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் தண்ணி காட்டிய பிரேமலதா: அடடா! என்ன ஒரு புத்திசாலித்தனம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக மகளிர் அணி செயலாளருமான பிரேமலதா நேற்று குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் பிரேமலதாவின் செயல் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசமாக அமைந்தது.


 
 
இரவு பத்து மணிக்கு மேல் ஒலிப்பெருக்கி வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் பொதுவான விதிமுறை. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் பொதுவாக பத்து மணிக்கு முன்னதாகவே தங்கள் தேர்தல் பரப்புரையை முடித்து விடுவார்கள். மீறினால் தேர்தல் அணையம் நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யும்.
 
இந்நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா பத்து மணி தாண்டிய பின்னரும் கூட்டத்தினர் கலையாமல் நின்றதால். மைக், ஒலிப்பெருக்கி எதுவும் இல்லாமல் சைகைகள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது, ஆனால் பிரேமலதா ஒலிப்பெருக்கி, மைக் இல்லாமல் சைகையில் பிரச்சாரம் செய்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல் துறையினரும், தேர்தல் அலுவலர்களும் விழிபிதிங்கி நின்றனர்.
 
பிரேமலதா ஆரம்பித்துள்ள இந்த புதிய தேர்தல் பிரச்சார யுக்தியை மற்ற கட்சியினரும் கடைபிடிக்க ஆரம்பித்தால் தேர்தல் ஆணையம் என்ன செய்யும்.