இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் தான் இருக்கின்றோம்: பிரேமலதா

siva| Last Updated: வெள்ளி, 27 நவம்பர் 2020 (19:55 IST)
இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் தான் இருக்கின்றோம்: பிரேமலதா
இப்போதைக்கு நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கின்றோம் என்றும் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில், வரும் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இணைவது என்பது குறித்த முடிவை கேப்டன் அறிவிப்பார் என்றும் பிரேமலதா கூறியுள்ளார் 
 
இன்று கடலூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற தேமுதிக செயலாளர் பிரேமலதா அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார். இந்த பகுதியில் வெள்ளத்தால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது என்றும் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்றும் எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இங்கு தேங்கியிருக்கும் தண்ணீரை ராட்சத குழாய் மூலம் வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார் 
 
அதன் பின்னர் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா இப்போதைக்கு நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றும் அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் தெரிவித்தார் 
 
மேலும் வரும் ஜனவரியில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என்றும் அந்த கூட்டங்களுக்கு பிறகு வரும் தேர்தலில் எந்த கூட்டணியில் தேமுதிக இணையும் என்பதை கேப்டன் முறைப்படி அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :