சசிக்கலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும்! – பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
Prasanth Karthick|
Last Modified ஞாயிறு, 24 ஜனவரி 2021 (11:14 IST)
கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிக்கலா மீண்டு வந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என பிரேமலதா விஜயாகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேமுதிக கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் “தமிழகத்தில் குறைந்தது 6 தொகுதிகளிலாவது தேமுதிக வெற்றி பெற்றால்தான் மீண்டும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற முடியும். அதற்கு தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் சசிக்கலா குறித்து பேசிய அவர் “சசிக்கலாவுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை கிடையாது. அவரை வைத்து ஆதாயம் அடைந்தவர்கள் பலர். அவர் பூரண நலத்துடன் திரும்பி மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என ஒரு பெண்ணாக ஆதரவு தருகிறேன்” என தெரிவித்துள்ளார்.