வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2016 (07:01 IST)

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சீருடை அணிந்து பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

 
இது குறித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுச் செயலாளர் முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, மற்றும் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதற்காக, கடந்த பல வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் என மக்கள் நல பணிகளிலும்   பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.
 
அது போல் இந்த வருடமும் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மற்றும் திருப்பூரில் சீருடை அணிந்த அணிவகுப்பு மற்றும் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுக்கவே பாப்புலர் ஃப்ரண்ட்  உயர்நீதிமன்றத்தை அணுகியது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கன்னியாகுமரி மற்றும் திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சீருடை அணிந்து ஒற்றுமை பேரணி (UNITY MARCH) நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு நீதிக்கான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
 
எனவே, வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டி நம்தேசத்தை வலுப்படுத்த உயிர்மூச்சு இருக்கும் வரை போராடுவோம் என்ற முழக்கத்துடன் நடைபெறும் ஒற்றுமை பேரணியில் மக்கள் திரளாக கலந்து கொண்டு பாப்புலர் ஃப்ரண்டின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.