வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2015 (17:24 IST)

நிரம்பியது பூண்டி ஏரி: உபரி நீர் வெளியேற்றம்

திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரி நிரம்பியதால் அதிலிருந்து உயரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மற்றும் சென்னை மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகின்றது.


 

 
சென்னைக்கு குடி நீர் வழங்கும் முக்கிய ஏரியாக இருப்பது, பூண்டி ஏரி. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரியின் மொத்த கொள்ளளவும் நிரம்பியுள்ளது.
 
இதைத் தொடர்ந்து, பூண்டி ஏரிக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனால் கரையோரப்பகுதி மக்கள் மற்றம் அதை ஒட்டி அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுவதற்கு வாய்ப்புள்ளது.
 
ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் திருவள்ளூர் பெரிதும் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகின்றது.
 
இந்நிலையில், புழல் ஏரியும் சில நாட்களில் நிறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் மேலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.
 
தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.