தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..

Arun Prasath| Last Modified சனி, 18 ஜனவரி 2020 (19:45 IST)
தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், சத்துணவு மையங்களிலும், பள்ளிகளிலும், அங்கன் வாடி உட்பட பல முக்கிய இடங்களிலும் 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

மேலும் புலம்பெயர் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. காலை 7 மணி முதல் 5 மணி வரை சொட்டு மருந்து முகாம்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :