10-ஆம் வகுப்பு தேர்வில் பழி தீர்க்க கத்தியுடன் வந்த மாணவர்கள்


Caston| Last Modified செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (17:21 IST)
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அந்த பழியை தீர்க்க சில மாணவர்கள் கத்தியுடன் தேர்வு எழுத சென்றுள்ளனர்.

 
 
பாளையங்கோட்டையில் பேருந்தில் செல்லும் போது சில மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 
காவலர்கள் நடத்திய சோதனையில் பாளையங்கோட்டையில் மாணவர்களிடமிருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு மாணவர்களிடம் இருந்து அந்த நான்கு கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கத்தியை பறிமுதல் செய்ததும் மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர். காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பேருந்தில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அதனை பழி தீர்க்க மாணவர்கள் கத்தி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :