செவ்வாய், 11 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 அக்டோபர் 2025 (11:15 IST)

நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி.. என்னென்ன நிபந்தனைகள்?

நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி.. என்னென்ன நிபந்தனைகள்?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் தழுவிய பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்திற்கு தமிழகக் காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
 
நயினார் நாகேந்திரனின் பிரசாரம் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறது. இதில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று பிரசாரத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்த பயணத்தின்போது, நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பதுடன், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சில மத்திய அமைச்சர்களும் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரசாரக் கூட்டங்களுக்கு காவல்துறை சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது: கர்ப்பிணிகளும் குழந்தைகளும் கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுடன் நயினார் நாகேந்திரனின் பிரசாரம் விரைவில் தொடங்க உள்ளது.
 
 
Edited by Mahendran