சேலத்தை உலுக்கிய சைக்கோ கொலைகாரன் கைது!

சைக்கோ கொலையாளி
Prasanth Karthick| Last Modified சனி, 22 பிப்ரவரி 2020 (15:34 IST)
சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக முதியவர்களை கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கொலைகாரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சைக்கோ கொலையாளி கைது

கடந்த 2ம் தேதி சேலத்தில் உள்ள திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் நள்ளிரவு நேரத்தில் சாலையோரமாக உறங்கிக் கொண்டிருந்த பிச்சைக்கார முதியவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் கண்டறிவதற்குள் தொடர்ந்து 3 மற்றும் 4ம் தேதிகளிலும் சேலத்தின் வெவ்வேறு பகுதிகளில் சாலையில் உறங்கிய பிச்சை எடுக்கும் முதியவர்கள் ஒரே போன்று கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்கள். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் ஒரு நபர் கல்லைப் போட்டு கொலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அந்த நபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் 20 நாட்கள் கழித்து கொலைக்காரனை பிடித்துள்ளனர். விசாரணையில் கொலையாளி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண்டிசாமி என்று தெரிய வந்துள்ளது. போதைப்பழக்கத்தால் வீட்டாரால் அடித்து துரத்தப்பட்ட ஆண்டிசாமி போதைப்பொருள் வாங்குவதற்காக முதியவர்களை கல்லைப் போட்டு கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :