போலீஸை ஏமாற்றலாம்….. கொரோனாவை ஏமாற்ற முடியாது – அமைச்சர் உதயகுமார்

udhayakumar
sinoj| Last Updated: ஞாயிறு, 29 மார்ச் 2020 (14:07 IST)
போலீஸை ஏமாற்றலாம்….. கொரோனாவை ஏமாற்ற முடியாது – அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தில்
கொரோனா வைரஸால் மொத்தம் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போலீஸாரை ஏமாற்றியதாக நினைத்து வெளியில் சுற்றித் திரிவோர் கொரொனாவுக்கு தப்ப முடியாது என இதை மக்கள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான ஊரடங்கில் இருந்து விலக்கு என தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்தார். பொதுமக்கள் தங்களது கட்டுப்பாட்டு கோரிக்கைகளை மாநில கட்டுப்பாட்டு அறை எண் 1070க்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 க்கு அழைக்கவும் என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :