வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2016 (11:30 IST)

கொலை, கொள்ளையை தடுக்காமல் அப்பாவி மக்களை தாக்குவதா? - ஜி.ஆர். கண்டனம்

கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியாத காவல்துறை ஏதுமறியாத அப்பாவிகளைத் தாக்குகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் என குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து புதுக்கோட்டை போஸ் நகரில், மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வேலையின்மை என்பது பெரும் கவலையளிக்கும் விதமாக உள்ளது. கடந்த 2011-ல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுபெற்றவர்களின் எண்ணிக்கை 73 லட்சம் பேர்.
 
தற்பொழுது அது 90 லட்சமாக உயர்ந்துள்ளது. அகில இந்திய அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் வேலையில்லாமல் காத்திருக்கும் நிலை உள்ளது. இதில் வெறும் 1.5 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
 
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் நெல்லையில் 6 பேரும், துக்துக்குடியில் 8 பேரும் என 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
 
இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக அப்பாவிப் பொதுமக்களை அது தாக்கிவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் நடைபெற்ற சம்பவங்கள் இதற்கு சாட்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.