1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (13:14 IST)

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை! புத்தாண்டில் போராட்டம்! – ராமதாஸ் அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப்போவதாக ராமதாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு அமைந்த கூட்டணியே தொடருமா அல்லது புதுக்கூட்டணி அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமக சமீப காலமாக ஆளும் கட்சியின் நிர்வாகத்தில் உள்ள போதாமைகள் குறித்து விமர்சித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 20% தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் புத்தாண்டில் இந்த போராட்டத்தை அவர் நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் கவன ஈர்ப்புக்காக பாமக இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.